தென்னிலங்கையில் பயங்கரம் சம்பவம் ; வீட்டின் முன் சுட்டுக்கொல்லப்பட்ட கிரிகெட் வீரர்


tamil lk news


 அம்பலாங்கொட கந்த மாவத்தை பகுதியில் இன்று (16) மாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதில் பிரபல கிரிக்கட் வீரரான 41 வயதான தம்மிக்க நிரோஷன் வீடொன்றின் முன்னால் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.


சுடப்பட்ட தம்மிக்க நிரோஷன், இலங்கையில் முதல்தர கிரிக்கெட் அணியான சிலாவ் மேரியன்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.




2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.அம்பலங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பாடசாலை கிரிக்கெட் கேப்டனாகவும் இருந்துள்ளார்.




துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி வந்தார் என்பது இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Srilanka Tamil News





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்