ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றிலிருந்து 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று ருவன்வெல்ல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சிறுமி மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் சிறுமியின் தாயார் பேச முடியாத நிலையில், மயங்கி கிடந்ததை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
தெவ்மி அமயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil news-Tamil lk News



