பொலிஸாரை அச்சுறுத்தி புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞன் கைது!

 

tamil lk news

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர் அடாத்தாக காணிக்கு உரிமை கோரி வந்துள்ளார்.


இந்நிலையில், கும்பல் ஒன்றினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததனை தொடர்ந்து குறித்த வர்த்தகரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொலிஸாருடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் பெண்மணி ஒருவர் நேற்று (30.07.2024) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்மணியின் மகன் என கூறப்படும் நபர்களால் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பெண்மணியின் மகன் ஒருவர் நேற்றையதினம் இரவு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று பொலிஸாரை அச்சுறுத்தி புகைப்படம் எடுக்க முற்பட்ட வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்