லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

 இன்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ (litro) சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது. 


லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 

tamil lk ews


இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. 


இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.




இதன்படி, 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 18 ரூபாயினால் குறைக்கப்படுகிறது. 


இதற்கமைய, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்