கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! டிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு சாரதி தப்பியோட்டம்...!

 

Tamil lk News

 கிளிநொச்சியில் (Kilinochchi) பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.



குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கணை சந்திப்பகுதியில் வைத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது, சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.


சாரதி

பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் வாகனம் காற்றுபோன நிலையில் வாகனத்தை விட்டு சாரதி தப்பியோடியுள்ளார்.



மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட பொலிசார் சாரதியை தேடி வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்