முல்லைத்தீவில் பாடசாலைக்கு போதைப்பொருளுடன் சென்ற மாணவன்....! (mullaitivu news)

 

tamil lk news

முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரிடம் கஞ்சா பொதி காணப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.


கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தனது வீட்டில் இருந்து வழமைப்போல சென்றுள்ளார்.



இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் வைத்திருந்த சிறு பொதி ஒன்றினை சக மாணவர்கள் பாடசாலையில் வைத்து  அவதானித்துள்ளனர்.


இதன்போது சக மாணவர்கள் இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர், மாணவன் வைத்திருந்த பொதிக்குள் கஞ்சா போதைப்பொருள் இருப்பதினை அவதானித்துள்ளார்.



இதனை தொடர்ந்து மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.


இந்நிலையில் தகவலறிந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்