யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கைதான பெண்...!

 

tamil lk news

யாழ்ப்பாணம் - சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna Tamil news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்