எரிபொருள் தட்டுப்பாடு இல்லை! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

tamil lk news


இது குறித்து தற்போது எந்த பிரதேசத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


இன்று நள்ளிரவில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும், எரிபொருள் விலை திருத்தம் வழமை போன்று இன்று இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்