கொழும்பில் 67வது மாடியில் இருந்து குதித்து மாணவனும் - மாணவியும் மரணம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

 கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளனர்.


இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது. 


கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

tamil lk news


கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து இருவரும் குதித்து 3வது மாடியின் மேல்தளத்தில் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 


.



மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்