இந்திய தொடரில் இருந்து நீக்கப்பட்ட மற்றுமொரு இலங்கை வீரர்...!

 

tamil lk news

பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக  இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷார, இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார்.


நேற்றிரவு (24) இடம்பெற்ற பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நுவான் துஷார  தொடரில் இருந்து விலகியுள்ளதாக  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, நுவான் துஷாரவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.



அதேநேரம் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Srilanka news



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்