வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு...! Vavuniya News

 

tamil lk news

வவுனியா(Vavuniya) பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா பதவியேற்றுள்ளார்.


அவர் இன்று (08.07.2024) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக கல்வி சார் உத்தியோகத்தர்கள் புடைசூழல் மங்கள வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்ட புதிய துணைவேந்தர், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தினை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டிருந்தார்.




அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் உட்பட பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் கல்வி சார்ந்த ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Vavuniya Tamil News

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்