கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுஸரும் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது.
விபத்தை அடுத்து எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Srilanka Tamil News


