9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா

  சர்வதேச விண்வெளி மையத்துக்கு (International Space Station) கடந்த ஆண்டு ஜூன் 5ம் திகதி  இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சென்றனர். 


அவர்கள் 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை.

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா/Sunita to return to Earth after 9 months


இதையடுத்து இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை பால்கன்-9 ராக்கெட்டில் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா/Sunita to return to Earth after 9 months


இதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷிய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றனர். 



இந்த விண்கலம் இன்று காலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். 


அவர்களை அங்கிருக்கும் வீரர்கள் வரவேற்றனர். 


வருகிற 19-ம் திகதி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப உள்ளனர். 


அதேவேளையில் வானிலை இடையூறு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்