கொழும்பில் பதற்றம் - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!

 கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான அதுருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த துப்பாக்கிச் சூட்டில்   ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகர் கே. சுஜீவாத என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 




கிளப் வசந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   


காயமடைந்தோர் ஹோமாகம மற்றும் அத்துருகிரிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்