நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் ஒன்லைன் வீசா புதிய திட்டம்..!

tamil lk news


 ஒன்லைன் வீசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.


இந்த வீசா முறைமையினால் நாட்டின் முக்கிய தகவல்கள் கசியும் அபாயம் காணப்படுவதாகவும் இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.


தனிப்பட்ட ரீதியில் இந்த மனுக்களை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர்.


குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், சுற்றுலாத்துறை அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.




ஒன்லைன் வீசா நடைமுறையினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


ஒன்லைன் வீசா குறித்த கொடுக்கல் வாங்கல் மத்திய வங்கி மோசடியை விடவும் நூறு மடங்கு பாரியளவிலானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்