வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் விசேட அறிவிப்பு...!

 குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு


முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil lk news


எனவே இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.


அதற்கமைய 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்தத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.



மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Vavuniya Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்