பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கை பெண் முதலிடம்...!

tamil lk news


 2024ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில்  இலங்கை வீராங்கனை கங்கா செனவிரத்ன முதலிடத்தை பெற்றுள்ளார்.


இந்த போட்டியின் போது, அவர் போட்டி தூரத்தை 1:04.26 நிமிடங்களுக்குள் நீந்தி கடந்துள்ளார்.


இது அவருக்கு தனிப்பட்ட ரீதியில் சிறந்த ஒரு பதிவாக கருதப்படுகின்றது.


இருப்பினும், அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற அவரது இறுதி நேரம் போதாமை காரணமாக அவர் அடுத்த சுற்றுக்கு தெரிவான16 போட்டியாளர்களில் அவர் இடம்பெறவில்லை.


அதேவேளை, குறித்த நீச்சல் போட்டியில் விளையாடிய மொத்த போட்டியாளர்களில் செனவிரத்ன 30 இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்