வகுப்பறையில் பாய் விரித்து உறங்கிய ஆசிரியைக்கு நேர்ந்த கதி!

 இந்தியா - உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் உள்ள தானிபூர் பகுதியில் பாடசாலை  ஒன்று உள்ளது. 


இந்த பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாய் விரித்து தூங்குவதும், அவருக்கு பாடசாலை மாணவிகள் ஒவ்வொருவராக விசிறி கொண்டிருப்பது போன்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

tamil lk news


அதில், ஒரு மாணவி ஆசிரியையின் தலைக்கு அருகில் அமர்ந்து அவருக்கு விசிறி கொண்டிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனங்களை பதிவிட்டனர். 


இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், 'ஆசிரியர்களே இப்படி இருக்கும் போது பாடம் கற்பிப்பது எப்படி இருக்கும். வெயிலில் இருந்து விடுபட அப்பாவி குழந்தைகளை விசிற வைக்கிறார் ஆசிரியை' என விமர்சித்து உள்ளார். 


இந்த  வீடியோ வைரலானதை அடுத்து  வகுப்பறையில் பாய் விரித்து உறங்கிய ஆசிரியை டிம்பிள் பன்சால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்