அம்மனை வழிபட சென்ற பெண்ணுக்கும் பொலிஸாருக்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி....!

 

tamil lk news

கதிர்காமம் வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண்ணொருவரின் தங்க நகையை திருடிய சந்தேக நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை பிளேட்டால் வெட்டி தப்பியோடியுள்ளார்.


காயமடைந்த கான்ஸ்டபிள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பதுடன் கதிர்காமம் விகாரையின் பெரஹரா நிகழ்வின் போது குறித்த கான்ஸ்டபிள் கடமையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.



வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண் ஒருவரிடமிருந்து தங்க நகையை சந்தேகநபர் திருடிச் செல்வதைக் கண்ட கான்ஸ்டபிள், சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டார்.


இதன்போது, சந்தேக நபர் கையிலிருந்த பிளேட்டால் கான்ஸ்டபிளின் இடது கையை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்