வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து - படுகாயம் மூவர்!

 வவுனியா ( Vavuniya) பட்டக்காடு வயல்வெளிக்கு அண்மித்த பகுதியில் இன்று  மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால் சென்ற பிரிதொரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடன் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் தெரியவருகின்றது.

tamil lk news


இவ் விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Vavuniya Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்