விபத்தில் சிக்கிய மகளை காப்பாற்ற போராடிய தந்தை...! இறுதியில் நேர்ந்த விபரீதம்...!

 

tamil lk news

பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளம் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.


பலாங்கொடை- கஹடபிட்டிய வீதியில் நேற்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பல்லேபெத்த, அமிபாவில பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய திலின ரங்கலால் என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நாய்க்கடிக்கு உள்ளான தனது மகளுக்கு பலாங்கொடை வைத்தியசாலையில் தடுப்பூசியை செலுத்திவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


பலாங்கொடை பிரதான பேருந்து நிலையம் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த போது பின்னால் வந்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.



இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில், லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்தாது வேகமாக சென்றுள்ளார்.


குழந்தையை உடனடியாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு லொறியை துரத்திச்சென்று லொறியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாரதியுடன் தந்தை முரண்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதன்போது லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்தாது மீண்டும் வேகமாக சென்றபோது அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்