தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கியுள்ள பொதுக் கட்டமைப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதற்கமைய தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பிரதான கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.