அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை குறைப்பு!

 சில அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு  லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.


tamil lk news


அதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டு 240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


அதோடு 1,020 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை கௌப்பி 998 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


ஒரு கிலோகிராம் சிவப்பு கௌப்பி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 940 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.



மேலும் , இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 265 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Srilanka Tamil News




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்