தங்க தாமரை மலருடன் ஒருவர் கைது!

 தொல்பொருள் மதிப்பு மிக்க தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய தயாரான நபர் ஒருவரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று  கைது செய்துள்ளனர்.


மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுவிஹார பிரதேசத்தில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பல்வேறு அளவுகளில் 24 இதழ்களைக் கொண்ட தொல்லியல் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கத் தாமரை மலரின் எடை 706 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

tamil lk news


குறித்த மலரை 5,000,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கைது செய்யப்பட்டவர் 33 வயதான மாத்தளை கவுடுபெல்லல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்