வாகன உரிமையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்-Tamil lk News

 நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

tamil lk news


புகை பரிசோதனைச் சான்றிதழ் 

வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் போக்குவரத்துத் துறையினால் சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு பல சேதங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை பிரதானமானது.


தீர்வாக, புகை பரிசோதனைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, நாட்டின் வளிமண்டலத்தின் தரத்தை நல்ல நிலையில் பராமரிக்க முடிந்துள்ளது.


மேலும், போக்குவரத்து அமைச்சு, கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு ஆகியவை இணைந்து அடுத்த 6 மாதங்களுக்குள் வளி மாசடைவதை அளவிடும் நிலையங்களின் எண்ணிக்கையை நூறாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.


இந்தத் தரவுகள் அனைத்தையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதற்கும், உலகில் எங்கிருந்தும் எந்தவொரு குடிமகனுக்கும் புகை உமிழ்வு நிலைமைகளை ஓன்லைனில் நேரடியாகப் பார்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


மேலும், வாகன புகை உமிழ்வு சான்றிதழ் பெற்ற பின்னர் அதே இடத்தில் இருந்து காப்புறுதி மற்றும் வாகன அனுமதிப் பத்திரம் பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


மேலும், வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொலிஸாரினால் வழங்கப்படும் புள்ளிவழங்கும் முறைமைக்குத் தேவையான தரவுக் கட்டமைப்பு மற்றும் பொலிஸாருக்கு வழங்க வேண்டிய உபகரணங்கள் பெறுவதற்கான கேள்விமனு கோரும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளன.



அடுத்த மாதத்திற்குள் பொருத்தமான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


மேலும், சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு அமைய புள்ளிகளை குறைக்க இருப்பதோடு அதனை நடைமுறைப்படுத்த முன்னர் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அறிவூட்டல் வாட்ஸ்அப் செய்திகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்