WhatsAppஇல் வரும் புதிய அம்சம்!

 

tamil lk news

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.


அந்த வகையில் தற்போது  இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்று மெசேஜ்களுக்கு உடனடியாக ரியாக்ட் செய்யும் வகையில் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.


அந்த ஆப்களைப் போன்று இதிலும் மெசேஜை டபுள்-டேப் செய்தால் ஹார்ட் இமோஜி உடன் ரியாக்ட் செய்யப்படும். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.



இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வாட்ஸ்அப் கடந்த வாரத்தில் பல்வேறு அப்டேட்களை கொடுத்தது. ரீஷேர் ஸ்டேட்டஸ் வசதி மற்றும் நியர்பை ஷேர் போன்ற அம்சத்தை அறிமுகம் செய்தது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்