களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 சிறுமி ஒருவரை 19 வயது இளைஞன் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.
குறித்த சிறுமியின் வீட்டிற்கு இரவில் யாருமறியாது மோட்டார் சைக்கிளில் சென்று அதனை மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு மதிலால் ஏறி வீட்டிற்கு சென்று சிறுமியுடன் காதலில் ஈடுபட்டுவிட்டு திரும்புவதை காதலன் வழைமயாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அதனை அவதானித்த இனம் தெரியாதோர் காதலன் வழமைபோல மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு காதலியிடம் சென்ற போது மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை தொடர்பான விசாரணையில் குறித்த இளைஞன் காதலியான 15 வயது சிறுமியின் வீட்டிற்கு இரவில் களவாக சென்றுவந்தமை அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Srilanka Tamil News



