வவுனியா A9 வீதியில் பயங்கர விபத்து... ஒருவர் வைத்தியசாலையில்!

 

tamil lk news

வவுனியாவில் (Vavuniya) உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இச்சம்பவம் இன்றிரவு (21-08-2024) விளக்கு வைத்த குளம் ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது, அதே திசையில் பயணித்த ஹையேஸ் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Vavuniya Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்