அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் கோர விபத்து; 7 பேர் மருத்துவமனையில்

 

tamil lk news

கொழும்பு நோக்கி பயணித்த  தனியார் பஸ் ஒன்று விபத்தில் சிக்கியதில்  7 பேர் காயமடைந்துள்ளனர்.


அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தங்கல்ல பகுதியில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


விபத்தினால் காயமடைந்தவர்கள் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துக்குள்ளானவர்களின் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்