பரிஸ் ஒலிம்பிக்கில் தருசி கருணாரத்ன பங்கேற்கவுள்ள போட்டி இன்று!

tamil lk news


 பரிஸில் (Paris) நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் (Olympics) போட்டிகளின் 800 மீட்டர் (800m) ஓட்டப்போட்டியில்  இலங்கை சார்பில் தருசி கருணாரத்ன (Tharushi Karunarathne) பங்கேற்கவுள்ளார்.


தருசி பங்கேற்கும் குறித்த 800 மீட்டர் ஓட்டப்போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


இந்த வருடம் 800 மீட்டர் ஓட்டப்போட்டிகளுக்கு தருஷி உள்ளிட்ட ஆசியாவினை சேர்ந்த 4 வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


அவர்கள் பலஸ்தீன், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.


இவர்களை தவிர, லிதுவேனியா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, அமெரிக்கா, ஜமேக்கா மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுடன் தருசி போட்டியிடவுள்ளார்.



19 வயதான தருசி, 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்