சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த 5 டிப்பர்கள் மடக்கி பிடிப்பு - ஐவர் கைது (Jaffna News)

 

tamil lk news

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்தும் உள்ளனர்.


சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் நேற்றையதினம் (08.08.2024) மூன்று டிப்பர் வாகனங்களும் நேற்றுமுன்தினம் இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.


அத்துடன், குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், சந்தேகநபர்களில் ஒருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jaffna Tamil News




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்