வாகன விபத்தில் சிக்கி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

tamil lk news


 கிரியுல்ல மற்றும் கொடதெனிய ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.


தனியார் பஸ் ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தின் போது, பாரஊர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இதேவேளை மீகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதுக்கை - லியன்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து நேற்று   இடம்பெற்றுள்ளது.


பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பஸ் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்