தீபாவளியை முன்னிட்டு இந்த மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

 

tamil lk news

நாட்டில் உள்ள ஊவா மாகாண சபையின் கீழ் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Girl in a jacket மின் கட்டண குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிவிப்பு!


எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மறுநாள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்