பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு: 42 பேர் உயிரிழப்பு...!

பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தைச் சேர்ந்த சிலர் பிரசினர் நகரிலிருந்து பெஷாவர் நகருக்கு பஸ் மற்றும் காரில் பயணித்துள்ளனர்.


குறித்த பஸ் மற்றும் கார் ஆகியன குரம் எனும் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த கும்பல் வாகனங்களை இடைமறித்துள்ளது.

tamil lk news


அத்துடன் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டுள்ளனர்.


இதில் 42 பேர் உயிரிழந்ததோடு மேலும் சிலர் காயமடைந்தனர்.




சம்பவ இடத்துக்கு தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் என்பதும் தாக்குதல் நடத்தியவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது் தெரிய வந்துள்ளது.







Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்