நாடளாவிய ரீதியில் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலை!

tammil lk news


 நாடளாவிய ரீதியில் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இது குறித்து லாப் எரிவாயு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் வினவியபோது,


தனது விநியோக நிறுவனத்திடமிருந்து விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு இருப்புக்களை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.




இதனால் லாப் எரிவாயு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கையில் உள்ள லாப் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் லாப் எரிவாயு இல்லாமை மக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.




மேலும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்