முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சட்டமூலத்தில் சான்றிதழை அங்கீகரித்து, சட்டமாக கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.