வவுனியாவில் சேனாதிராஜா தலைமையில் - தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம்

 

tamil lk  news

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.


கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில்,


சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன்,




மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், த.கலையரசன்,மற்றும் துரைராஜசிங்கம் குலநாயகம், செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.




இதேவேளை குறித்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்கவேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்