ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம் (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார்.
மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார்.
இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.
1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.
அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.
எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது.



