ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இலங்கையில் நடந்து முடிந்த 10 ஆவது நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றுள்ல நிலையில் இன்று புதிய அமைச்சரவை நியமனம் இடபெற்றுகின்றது.
அந்தவகையில் முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சர்கள் அமைச்சரவை விபரங்கள்
பிரதமர் ஹரிணி - கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
விஜித ஹேரத் - வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.