வவுனியா (Vavuniya) புகையிரத நிலையில் இன்று மாலை இரு மோட்டார் சைக்கில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூங்கா வீதியூடாக வந்த மோட்டார் சைக்கில் பிரதான வீதியான புகையிரத நிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து இருவர் காயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Vavuniya News)





