தனியார் விடுதியொன்றில் முகநூல் விருந்து: 10 பேர் கைது....!

 

tamil lk news

 பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த விடுதியில் இடம்பெற்ற விருந்து தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கைதானவர்கள் முகப்புத்தகம் ஊடாக இந்த விருந்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 இதன்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 45 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான போத்தல்களும், 550 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



 கைதானவர்கள் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சந்தேகநபர்கள் இன்றைய தினம் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்