திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்ட முக்கிய குடியிருப்புப் பகுதி!

  

tamil lk news



திருகோணமலை (Trincomalee) - வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கடந்த சில தினங்களாக கடலரிப்பால் அப்பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான காட்சியை தம் வாழ்வில் முதன்முறை காண்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


 இந்த கடலரிப்பால் கடற்கரையை அண்டி காணப்படும் சில வீடுகளின் மதில்கள், அத்திவாரம், சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.



இந்த கடற்பகுதியில் பாரிய இரும்புப் பின்னல் தொகுதி ஒன்று, கரையின் நீளமான பகுதிக்கு வெளிவருவதாகவும், இது என்ன என்பது தொடர்பில் அறிய முடியாதுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்