அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா(Ishadi Amanda) இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளார். மேலும், தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா (Ishadi Amanda) முடிசூட்டப்பட்டார்.
இதன் காரணமாக, திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் (Ishadi Amanda) கிடைத்தது.
Srilanka tamil news
