இலங்கைக்கு வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள தேங்காய்கள்

  

tamil lk News

தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன ஆகியோர் இணைந்து இந்த வாரம் சமர்பிக்க இருந்த கூட்டு அமைச்சரவை பத்திரம் தேங்காய் இறக்குமதிக்கான தற்போதைய நடவடிக்கைகள் மீள் மதிப்பீடு காரணமாக தாமதமானது.


இந்தநிலையில், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க, இந்தோனேசியாவில் இருந்து முக்கியமாக இறக்குமதி செய்யப்படும் விதைகள், தேங்காய்த் பால்மா மற்றும் தேங்காய் பால் போன்ற தேங்காய் தொடர்பான பொருட்களின் இறக்குமதியை தேங்காய் சேதமடையாமல் இறக்குமதி செய்வதை உள்ளடக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.



 எவ்வாறாயினும், பல கலந்துரையாடல்களின் பின்னர் தேங்காய் இறக்குமதி தொடர்பான ஆய்வு தற்போது அமைச்சரவை பத்திரத்தில் கைவிடப்பட உள்ளதாகவும் ஆராய்ச்சியின் படி, இந்தோனேஷியா தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மிகவும் பொருத்தமான நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேவைக்கு ஏற்ப தேங்காய் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



 இந்தநிலையில், மொத்தமாக 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் உற்பத்திகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



புதிய அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





News Thumbnail
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் இரத்த தான நிகழ்வு -vavuniya news



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்