யாழில் மாபெரும் தொகையில் ஏலத்தில் போன மாம்பழம்

  

tamil lk news

யாழ்ப்பாணம் (Jaffna) புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தில் மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

 மாம்பழத் திருவிழா

ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழமே இவ்வாறு விற்பனையாகியுள்ளது.


கடந்த (22.01.2025) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் (26.01.2025) அன்று ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.


 இங்கு விஷேட அபிஷேக ஆராதனை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



 இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் இரண்டு லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.



புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஜெயசந்திரன் என்பவரின் குடும்பத்தினரே இந்த மாம்பழத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamil lk news




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்