மாணவனுக்கு மதுபானம் வழங்கிய ரியூசன் ஆசிரியர் கைது

  

tamil lk news


மாணவரொருவருக்கு மதுபானத்தை வழங்கிய குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் பெல்மதுல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது.


அதேவேளை, மதுபானத்தை அருந்திய குறித்த மாணவர் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பெல்மதுல்லை நகரில் கார் ஒன்றில் வந்து இறங்கிய 19 வயது மாணவன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை குழுவொன்று விசாரித்துள்ளது.



இதன்போது அவர் மதுபானம் அருந்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


அதேவேளை காருக்குள் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்துள்ளார்.



இதனையடுத்து, குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் மாணவனின் மேலதிக வகுப்பு ஆசிரியர் என தெரியவந்துள்ளது.


இந்நிலையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய மேலதிக வகுப்பு ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்