நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது!

tamil News

tamil lk news


  அநுராதபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் அநுராதபுரம் பொலிஸாரால் யாழ் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்