வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டம்!

tamil news

 

tamil lk news

 வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் சார்பில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.

கோரிக்கை

இப் போராட்டம்  வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


"அரசாங்கம் இனியும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக எங்களுக்கான அரச வேலைவாய்ப்பை பரீட்சை இன்றி உறுதிப்படுத்து" என்ற கோரிக்கைக்கு அமைவாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்று வருகின்றது.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்



தேர்தல் காலங்களில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தபோதும் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிறந்த தீர்வினை பெற்று தருமாறு கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்