மோசமடையும் காற்றின் தரம் - நோய் நிலைமை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

tamil news

  நாட்டில் சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

tamil lk news


இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

அசாதாரண பனிமூட்டம்

இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 


.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்