வடக்கு மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; யாழில் ஜனாதிபதி உறுதி!

tamil lk news

  

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு நடத்தப்பட்டு, விரைவில் அந்த காணிகளை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு

அதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காகவோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகவோ நாட்டில் எங்கிருந்தும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் எனவும் அந்த காணிகளுக்கு பதிலாக வேறு காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



இக்கலந்துரையாடலில், யாழ்.மக்களுக்கான மிக முக்கியமான திட்டத்திற்காக யாழ்.ஜனாதிபதி மாளிகை முற்றாக விடுவிக்கப்படத் தயாராக இருப்பதாகவும், அதற்கான உரிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.



அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதால், இது குறித்து ஆராய்ந்து விரைவான முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்